கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேரத்தில், அதாவது இன்று (29) காலை 6 மணி முதல் 12 மணி வரை 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தொவித்தார்.
மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளரைச் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் கடந்த 12 மணி நேரத்தில் கல்முனை தெற்கில் 24 பேரும் கல்முiனை வடக்கில் 3 பேரும் காத்தான்குடியில் 4 பேரும் மட்டக்களப்பு வெல்லாவெளி ஆரையம்பதி தமண கோமரன்கடவல சாய்ந்தமருது காரைதீவு சம்மாந்துறை ஆகிய பகுதியளில் தலா ஒருவருமாக 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகணத்தில் இதுவரை மொத்தமாக 1058 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ரீ.எல். ஜவ்பர்கான்)
No comments:
Post a Comment