ஓமன் நாட்டிற்கு இந்த ஆண்டிற்குள் வரும் கொரோனா தடுப்பூசியை குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓமனில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது ஓமன் நாட்டிற்கு இந்த ஆண்டிற்குள் கொரோனா தடுப்பூசி வரவழைக்கப்பட உள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நாட்டிற்குள் வரவழைக்க இன்னும் திகதி அறிவிக்கப்படவில்லை. தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என எந்த சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட வயதுடைய சிறுவர்கள் தவிர அனைவரும் தங்கள் விருப்பம்போல் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
65 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெஞ்சக நோய்கள், நுரையீரல் பிரச்சினை, முன்கள பணியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றுபவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றுபவர்கள் ஆகிய குறிப்பிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் இலவசமாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டிற்குள் கொரோனா தடுப்பூசி வந்ததும் மேற்கண்ட பிரிவினருக்கு முதலில் வழங்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment