சோதனைக்குட்படுத்தப்படாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் : தேசிய ஆராய்ச்சி மன்றம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

சோதனைக்குட்படுத்தப்படாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் : தேசிய ஆராய்ச்சி மன்றம்

(க.பிரசன்னா) 

சோதனைக்குட்படுத்தப்படாத கொவிட் தொற்று நோய்க்கான மருந்துகள் என கூறப்படுகின்றவற்றை பயன்படுத்த வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் மூன்று மருந்துகள் சோதனை மட்டத்தில் இருப்பதாக தேசிய ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. 

சோதனை மேற்கொள்ளப்படாத கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் என கூறப்படுபவற்றை உட்கொள்ளக்கூடாது எனவும் சோதனை மேற்கொள்ளப்படும் மருந்துகள் தொடர்பில் தேசிய ஆராய்ச்சி மன்றத்தினால் அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹால தெரிவித்துள்ளார். 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயர்வேத பாணி மருந்து சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை. 

அத்துடன் பாணி மருந்தினை தயாரித்த தம்மிக்க பண்டார ஒரு ஆயுர்வேத பயிற்சியாளராக பதிவு செய்யப்படவில்லையென ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் கே.டி.சி.எஸ்.குமாரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment