(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பெருந்தோட்டங்களில் கொரோனா வைரஸ் பரவினால் அதனை கட்டுப்படுத்த மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். இப்போது தவறிழைத்தால் பின்னர் கொரோனா தாக்கத்தின் விளைவுகளை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மலையகத்தை பொருத்த வரையில் இதற்கு முன்னர் இருந்த நிலைமைகளை விடவும் 15 வீதமான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆட்சியில் வைத்திசாலைகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஒரு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சுகாதார துறையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்ட துறை வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மொழி பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வுகளையும் வழங்க வேண்டும்.
பெருந்தோட்டங்களில் கொரோனா வைரஸ் பரவினால் அதனை கட்டுப்படுத்த மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அங்குள்ள மக்களின் நிலைமைகள், பொது மலசலகூடம், தோட்டங்களில் கூட்டமாக பணி புரிதல் என்பவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக ஆரோகியமான கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
இப்போது தவறிழைத்தால் பின்னர் கொரோனா பரவியதன் விளைவுகளை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போய்விடும். எனவே சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் உடனடியாக கொரோனா தடுப்பு தெளிவூட்டல் நிகழ்வுகள் உருவாக்கி, கசிப்புகள், மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையகத்தில் மதுபானசாலைகளில் அனுமதி அதிகமாகும். அதனை நிறுத்தியாக வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment