(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எவ்வித விஞ்ஞான அடிப்படைகளையும் கொண்டிராத அதேவேளை, அதனால் எவ்வித பயனுமில்லை. எனவே இவ்விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நியாயமானதும் விரைவானதுமான தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் கொள்கை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.
இது விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் பயனற்றத்தன்மை தொடர்பில் பேராசிரியர் மலிக் பீரிஸும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகவே இவ்விவகாரத்தில் விஞ்ஞானபூர்வமாக முடிவொன்றுக்கு வருவதுடன், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு விரைவான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment