சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு பொலிஸ் திணைக்களமே பொறுப்பு - சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு பொலிஸ் திணைக்களமே பொறுப்பு - சட்டமா அதிபர்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பில்லை. எமது ஆலோசனையின் பிரகாரம் செயற்பட தவறிய பொலிஸ் திணைக்களமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் இருக்க வேண்டிய சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கும் அதிக கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணாகவே சிறைச்சாலையில் கொரோனா தொற்று நிலைமை பாரியளவில் பரவவும் காரணமாகும் என தெரிவித்து, சிலர் எம்மை குற்றம் சாட்டினாலும் அதன் நிலைமைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பில்லை.

மாறாக எனது ஆலாேசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு முடியாமல்போன பொலிஸ் திணைக்களளமே அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக, போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சாதாரண குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல சந்தர்ப்பங்களில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலாேசனை வழங்கி இருந்தேன்.

நாட்டுக்கள் கொராேனா தொற்று பரவி இருந்த கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பமான பின்னரும் வழங்கியிருந்த ஆலோசனைகளை இதுவரை செயற்படுத்தவில்லை.

கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவிக் கொண்டிருக்கும் நிலையிலும் தமது உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் கண்டுகொள்ளாது, கடமைகளை மேற்கொண்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவும் எமது அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் பொலிஸ் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களின் பலவீனம் காரணமாக எமது அதிகாரிகளின் முயற்சி பயனற்று போகின்றது.

பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெற்று தனது குடும்பத்தை நடத்திச் செல்லும் அனைத்து அரச ஊழியர்களதும் பிரதான கடமையாக இருக்க வேண்டியது, எந்த வகையான தடைகள், நெருக்கடிகள் குறைபாடுகள் ஏற்பட்டாலும் பொது மக்களுக்காக உண்மையாக சேவை செய்வதாகும் என்றார்.

No comments:

Post a Comment