கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்காக ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்காக வங்கிகள் மூலம் இதுவரை 150 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை திறந்தாலும் இந்தத் துறையை வழமைக்கு கொண்டுவர எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
சுற்றுலாத்துறை வழமை நிலைக்குத் திரும்பும் வரை இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment