மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படாததால் வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது தொடர்பாக அமுலில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தலைமையில் சனிக்கிழமை 12.12.2020 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8ம் திகதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட பி.சிஆர் பரிசோதனை முடிவுகளின்படி எந்தவிதமான புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை
இதனால் மாவட்டத்தில் வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது தொடர்பாக 5 பேருக்கு மாத்திரம் என்றிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு ஒருதடவையில் 25 நபர்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட செயலணி அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிமுறைகளை முற்றாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அக்கரைப்பற்று, கல்முனைப் பிரதேசங்களில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அப்பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்புக்கு கடமைக்கு வரும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் மட்டக்களப்புக்கு டிவராமல் தொடர்ந்து தத்தமது வீட்டிலிருந்து கடமையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment