நாளை முதல் மீளத் திறக்கப்படுகிறது கொம்பனி வீதி ரயில் நிலையம் - மூன்றாவது கொத்தணி பரவினால் ரயில்வே திணைக்களமே முழு பொறுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

நாளை முதல் மீளத் திறக்கப்படுகிறது கொம்பனி வீதி ரயில் நிலையம் - மூன்றாவது கொத்தணி பரவினால் ரயில்வே திணைக்களமே முழு பொறுப்பு

(இராஜதுரை ஹஷான்) 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட கொம்பனி வீதி ரயில் நிலையம் நாளை முதல் மீள திறக்கப்படும். ரயில் சேவையில் முறையான சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படா விட்டால் பாரிய நெருக்கடி ஏற்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கொம்பனி வீதி ரயில் நிலைய பொறுப்பதிகாரி கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் ரயில் நிலையம் கடந்த முதலாம் திகதி மூடப்பட்டது. 

கொம்பனி வீதி ரயில் நிலையத்துக்கு புதிதாக நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னர் நிலையத்தை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டது. 

ரயில் சேவையில் முறையான சுகாதார சேவைகள் பின்பற்றப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் முழுமையாக பின்பற்றவில்லை. 

ரயில் சேவையின் ஊடாக கொவிட்-19 வைரஸ் தாக்கம் மூன்றாவது கொத்தணியாக பரவுமாயின் அதற்கு ரயில்வே திணைக்களம் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும். 

ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் தகவல்கள், 1 மீற்றர் தூர இடைவெளி உள்ளிட்ட விடயங்களில் சிறந்த திட்டங்களை வகுத்து அதனை ரயில்வே திணைக்களத்துக்கு சமர்ப்பித்தோம். ஆனால் ரயில்வே திணைக்களம் இவற்றை செயற்படுத்தாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment