வன பாதுகாப்பு சட்டங்களை மீறுவோருக்கு சிறைத் தண்டனையை நீடிக்கவும், தண்ட பணத்தை இலட்சமாக அதிகரிக்கவும் யோசனை : சி.பி.ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

வன பாதுகாப்பு சட்டங்களை மீறுவோருக்கு சிறைத் தண்டனையை நீடிக்கவும், தண்ட பணத்தை இலட்சமாக அதிகரிக்கவும் யோசனை : சி.பி.ரத்னாயக்க

(இராஜதுரை ஹஷான்) 

வன பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் திருத்தம் செய்யப்படும். அழிவடைந்துள்ள வனப் பகுதிகளை புதுப்பிக்கும் மீள் நடுகை செயற்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக நல்லாட்சி அரசாங்க காலத்தில் திவிநெகும செயற்திட்டத்தை மையப்படுத்தி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்களுக்காக நீதித்துறை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது நீதிமன்ற செயற்பாடுகள் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக செயற்படுகிறது. வன பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை திருத்தியமைக்கவும், தேவையான புதிய சட்டங்களை இயற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வன பாதுகாப்பு சட்டங்களை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை காலத்தை நீடிக்கவும், தண்ட பணத்தை இலட்சமாக அதிகரிக்கவும் ஆரம்ப கட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

திட்டமிட்ட வகையிலான காடழிப்புக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வன மீள் நடுகை திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment