நிலநடுக்கத்தினால் விக்டோரியா நீர்த் தேக்க அணைக்கு பாதிப்பு இல்லை என உறுதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

நிலநடுக்கத்தினால் விக்டோரியா நீர்த் தேக்க அணைக்கு பாதிப்பு இல்லை என உறுதி

திகன மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் விக்டோரியா நீர்த் தேக்கத்தின் அணைக்கட்டுக்கு எந்தவொரு பாதிப்புகளும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

விக்டோரியா நீர்த் தேக்கத்திற்கு அமைச்சருடனான குழு கண்காணிப்பு விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பொல்கொல்லை மகாவலி அதிகார அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மிகவும் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு 400 உபகரணங்களுடன் 24 மணி நேரமும் அணைக்கட்டை கண்காணித்து வருகின்றனர். 

விக்டோரியா அணைக்கட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கட்டு பாதுகாப்பு திட்டத்தால் முழுமையாக புனரமைக்கப்பட்டதுடன் அணையின் தானியங்கி கதவு அமைப்புகள் கூட முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அணையில் நிறுவப்பட்ட நில அதிர்வுக்கான அளவுகள், அணையின் செயற்பாடுகள் மற்றும் நிலைத்தன்மைகள் குறித்த தகவல்களை, ரோபோ இயந்திரங்கள் போன்ற அதிநவீன உபகரணங்கள் முறையைப் பயன்படுத்தி விசேட பொறியியலாளர்கள் மற்றும் மத்திய அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆகியோர்களினால் 24 மணி நேரமும் இந்த அணைக்கட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

ஆகவே இதன் மூலம் திகன மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட்டு வரும் விக்டோரியா அணையின் ஸ்திரத்தன்மையை ஆராய நிபுணர்கள் குழு அடுத்த ஆண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும் அதற்கு தேவையான அனைத்து திட்ட பணிகளும் தற்பொழுது முடிவடைந்துள்ளாதாவும் அமைச்சர் சிறிபால கம்லத் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment