ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானார்.
ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.
இந்த நிலையில் தலைமை அணு விஞ்ஞானி கொலை செய்யப்பட்டதன் பதற்றம் தணிவதற்குள், ஈராக்கில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பலியானார். எனினும் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர் ஈராக் - சிரியா எல்லையில் காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அவருடன் மேலும் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment