சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் இன்று (14) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அழைப்பின் பேரில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

12 மாடிகளைக் கொண்ட இப்புதிய கட்டடத்திற்கான அடிக்கல் கடந்த 2016 ஆண்டில் நடப்பட்டதோடு, இக்கட்டடம் ரூபா. 12 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சர்வ மத அனுஷ்டானங்களை அடுத்து, நிகழ்வுகள் இடம்பெற்று உத்தியோகபூர்வமாக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் உரை நிகழ்த்தியதோடு, பதில் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் நன்றி உரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்னே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment