ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தக் கோரியும் அவர்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க கோரியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இந்த வேண்டுகோளை புத்தளம் மக்கள் சார்பாக முன்வைப்பதற்காகவே அமைதியான முறையிலான இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தில் சர்வமத ஒன்றிய தலைவர்கள, சமயத் தலைமைகள், அரசியல் தலைமைகள் உள்ளிட்ட இன,மத அரசியல் வேறுபாடின்றி சகல பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

புத்தளம் நிருபர்

No comments:

Post a Comment