அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு ஆலோசகராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான ஸ்காட் அட்லாஸ் என்பவரை நியமித்தார்.

பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியலில் முறையான அனுபவம் இல்லாத ஸ்காட் அட்லாசை கொரோனா தொடர்பான ஆலோசகராக நியமித்ததாக டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படும் முகக் கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கை அமுல்ப்படுத்துதல் ஆகியவற்றை ஸ்காட் அட்லாஸ் கடுமையாக எதிர்த்தார்.

இதனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அவர் ஜனாதிபதி டிரம்பை தவறான பாதையில் வழி நடத்துவதாக கண்டனங்கள் வலுத்தன. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் 20ம் திகதி பதவியேற்கிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள ஸ்காட் அட்லாஸ் ஜோ பைடன் உருவாக்கியுள்ள புதிய கொரோனா தடுப்பு குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment