மன்னாரில் காற்று மின்சார உற்பத்தி நிலையம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படும் - துமிந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

மன்னாரில் காற்று மின்சார உற்பத்தி நிலையம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படும் - துமிந்த திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டம் முறையாக செயற்படுத்தப்படுகிறது. எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னாரில் காற்று மின்சார உற்பத்தி நிலையம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்படும் என சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டம் சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு தற்போது சுதந்திரமான முறையில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சூரிய சக்தி, நீர் மின்சார உற்பத்தி அபிவிருத்தியினை மேம்படுத்த சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு காற்று மின்சார உற்பத்தி நிலையம் உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் கடந்த அரசாங்கத்தில் இடை நிறுத்தப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தின் பலவீனத்துக்கு ஒரு காரணியாகவும் அமைந்தது.

தேசிய மின் உற்பத்தியில் மின்சார உற்பத்திகளை அதிகமாக இணைக்க விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காற்று மின்சார உற்பத்தி நிலையம் பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment