(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலம் வரையான காலப்பகுதியில் 1445 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும், சில கிராம சேவகர் பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமைக்காக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமையவே கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இவ்வாறு 1445 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment