கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக வருமானத்தை உழைப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பிசிஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முகக் கவசங்கள், தொற்று நீக்கிகள், சோதனைக் கருவிகள் போன்றவறறின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்க்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment