விடுவிக்கப்படுகின்ற மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

விடுவிக்கப்படுகின்ற மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் அறிவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மற்றும் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல், நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்
01. டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)

• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)

• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு (மாளிகாவத்தை பொலிஸ் வலயம்)

• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்)

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்

• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)

• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு

• டேம் வீதி பொலிஸ் பிரிவு

• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு

• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு

• மருதானை பொலிஸ் பிரிவு

• கெரம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு

• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு ( ளுழரவா ழக குநசபரளழn சுழயன)

• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி

03. நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்

கம்பஹா மாவட்டம்
01. நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்

வத்தளை பொலிஸ் பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ( முரசரனெராநயெ)
• ஹெவரிவத்தை ( நுஎயசறையவவய) கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

பேலியகொட பொலிஸ் பிரிவு
• பட்டிய - வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்

பேலியகொட பொலிஸ் பிரிவு
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவ
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
• வெலேகொட வடக்கு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் (ஆஊ) வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி

வெயங்கொட பொலிஸ் பிரிவு
• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை

03. நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்

வத்தளை பொலிஸ் பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம்

• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்

பேலியகொட பொலிஸ் பிரிவில்
• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில்
• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்

களுத்துறை மாவட்டம்

01. நாளைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம்.

• புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment