கொரோனா வைரசினை தடுக்கக் கூடியது என தெரிவிக்கப்படும் உள்ளுர் மருந்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட உள்நாட்டு மருந்து குறித்து வதந்திகளை பரப்புவதை எதிர்க்கட்சி தவிர்க்க வேண்டும் விஞ்ஞான ரீதியிலான முடிவுகளிற்காக காத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா மருந்து வெற்றி பெற்றால் இலங்கை உலகம் முழுவதையும் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஏனைய நாடுகளின் மருந்துகளை விமர்சிப்பதில்லை என தெரிவித்துள்ள அவர் உள்ளுர் முயற்சிகளிற்கு மாத்திரம் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்படாத மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அர்த்தமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் எதிர்க்கட்சிகள் உள்ளுர் மருந்திற்கு ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment