கிழக்கு மாகாண ஆளுநர் முன்னாயத்தங்களை பார்வையிட்டார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

கிழக்கு மாகாண ஆளுநர் முன்னாயத்தங்களை பார்வையிட்டார்

புரெவி புயலினால் அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய பிரதேச மக்களை தெளிவுப்படுத்துதல் மற்றும் தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டுள்ளார்.

புரெவி சூறாவளி காற்றினால் அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய மக்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவதற்கும் மற்றும் அந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை கண்டறிவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று காலை திருகோணமலை கரையோர வீதி, சிரிமாபுர, மற்றும் திருகடளூர் கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.

இந்த பிரதேசங்கள் அடங்களாக கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களை சூறாவளியினால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களிலிருந்து மீண்டெடுப்பதற்காக பாதுகாப்பான இடங்களில் மக்களை அமர்த்துவது அவர்களுக்கு தேவையான உதவிகளை அடையாளம் காண்பதே இவரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த சூறாவளியினால் அனர்த்தங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்கான தேவையான வசதிகளில் உடனடி கவனம் செலுத்துமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு ஆளுநர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

No comments:

Post a Comment