சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 917 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (28) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி இளங்கலைமாணி பட்டத்தை முடித்துக் கொண்ட 21 பேருக்கும் அத்துடன் 2018.04.27ஆம் திகதி மற்றும் 2019.03.31ஆம் திகதி இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய பரீட்சைக்கு தோற்றி கூடிய புள்ளிகளை பெற்ற 387 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
அத்துடன் 2020.08.28ஆம் திகதி கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய அதில் சித்தி பெற்ற தமிழ் மொழி மூல பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 251 பேருக்கும் மற்றும் சிங்கள மொழி மூல பட்டதாரிகள் 285 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இதில் வரலாறு, அரசியல், புவியியல், பௌத்த சமயம், பௌத்த நாகரிகம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழிநுட்பம், கணிதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் கணக்கியல், தகவல் தொழிநுட்பம், சிங்களம் மொழி மற்றும் இலக்கியம் கலை, சுகாதாரம் போன்ற பாடங்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் காலை வேலையில் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த 250 பேருக்கும், பகல் வேலையில் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த 250 பேருக்கும் சப்ரகமுவ மாகாண கேட்போர் கூடத்தில் வைத்து நேற்று நேரடியாக நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.
காவத்தை விசேட நிருபர்
No comments:
Post a Comment