(செ.தேன்மொழி)
மத்திய தபால் பரிவர்த்தனை ஊடாக கடத்த முற்பட்ட எட்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று புதன்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைகளத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட நான்கு பொதிகளை சோதனைச் செய்துள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அதிலிருந்து 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 490 கிராம் குஷ் ரக போதைப் பொருளையும், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 80 கிராம் கொக்கைன் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப் பொருட்களை தபாற் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கும் நோக்கத்திலேயே, மத்திய தபாற் பரிவர்த்தனைக்கு இந்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொதிகள் அஹங்கம மற்றும் வாத்துவ ஆகிய இரு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்காகவே இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை.
மேற்படி விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment