கர்ப்பிணி பெண்களை ஏமாற்றி 30 குழந்தைகளை விற்பனை செய்த சந்தேகநபர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

கர்ப்பிணி பெண்களை ஏமாற்றி 30 குழந்தைகளை விற்பனை செய்த சந்தேகநபர் கைது

பிறந்த குழந்தைகளை பணத்திற்காக விற்கும் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தளை, உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த நபர் 30 குழந்தைகளை இவ்வாறு பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல நாட்களாக தேடப்பட்டு வந்த குறித்த நபர் இன்றையதினம் (22) கைது செய்யப்பட்டதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விளம்பரங்களை வழங்கி, கர்ப்பமுற்ற பெண்களை ஏமாற்றி, அவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி, அவரகளிடம் ஏதோவொரு வகையில் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு சந்தேகநபர், அவர்களிடம் குழந்தைகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு குறித்த பெண்களை பராமரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த, ஹல்துமுல்ல, சி.பீ. டி சில்வா மற்றும் மொரட்டுவை, தஹம் மாவத்தை ஆகிய இரு இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபரால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட 12 கரப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 5 பேரின் குழந்தைகள் 3ஆம் தரப்பினரால் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment