சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 20,000 கிலோ கிராமுக்கும் அதிக மஞ்சளுடன் 4 பேரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, பல நாள் மீன்பிடி படகு மூலம் குறித்த மஞ்சள் தொகை கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படை, புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (27) அதிகாலை ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து படகொன்றை சோதனையிட்டபோது, இவ்வாறு மஞ்சளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன் பெட்டிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கோணிகளில் வைத்து, இந்தியாவிலிருந்து இவ்வாறு மஞ்சள் கடத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பேருவளை மற்றும் ஹுங்கமவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, கைப்பற்றப்பட்ட மஞ்சளுடன் சந்தேகநபர்கள், ஹுங்கம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment