தசாப்தத்தின் சிறந்த மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி - தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் - ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

தசாப்தத்தின் சிறந்த மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி - தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் - ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க

கடந்த தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) ஒவ்வொரு துறையிலும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் இன்று (28) அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருதான, சேர் கா(ர்)பீல்ட் சோபர் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி, தசாப்பதத்தின் ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருது பரிந்துரையில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றிருந்தார் என்பதோடு, தற்போது வெளியிடப்பட்ட ICC தசாப்பத்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விக்கெட் காப்பாளராக சங்கக்கார அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICC தசாப்பத்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணி
ICC தசாப்பத்தின் ஒருநாள் கிரிக்கெட் அணி
இதேவேளை, தசாப்தத்தின் ICC கிரிக்கெட் வீராங்கனைக்கான, ரச்சல் ஹெஹொ பிளின்ட் விருதுக்கும் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் அவுஸ்திரேலிய அணியின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நிறைவடைந்து 2021ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ஐசிசியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விருதுகள் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு, ஊடகவியலாளர்கள், ஒளிபரப்பு நிறுவன பிரநிதிகள் உள்ளிட்டோரினால் விருதுகளைப் பெறும் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருதுகள் தொடர்பில் அவர்களது பங்களிப்பு 90% ஆக இருக்கும் அதேவேளை, எஞ்சிய 10% இரசிகர்களின் வாக்களிப்பின் மூலம் முடிவு செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் குறித்த ஒவ்வொரு பிரிவிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

சேர் காபீல்ட் சோபர்ஸ் விருதுக்காகன பரிந்து பட்டியல்
அஸ்வின் (இந்தியா)
விராட் கோலி (இந்தியா) - தெரிவானார்
ஜோ ரூட் (இங்கிலாந்து)
குமார் சங்கக்கார (இலங்கை)
ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
டி வில்லியர்ஸ் (தென் ஆபிரிக்கா)
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில்
ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)
ரங்கன ஹேரத் (இலங்கை)
விராட் கோலி (இந்தியா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
யாசிர் ஷா (பாகிஸ்தான்)
ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா) - தெரிவானார்
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
சிறந்த ஒருநாள் வீரருக்கான பரிந்துரை பட்டியலில்
தோனி (இந்தியா)
விராத் கோலி (இந்தியா) - தெரிவானார்
லசித் மாலிங்க (இலங்கை)
குமார் சங்கக்கார
ரோஹித் ஷர்மா (இந்தியா)
மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில்
ஆரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா)
கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவு)
ரஷீட் கான் (ஆப்கானிஸ் தான்) - தெரிவானார்
விராட் கோலி (இந்தியா)
லசித் மாலிங்க (இலங்கை)
ரோஹித் சர்மா (இந்தியா)
இம்ரான் தாஹிர் (தென்னாபிரிக்கா)
இது தொடர்பில் ICC யினால் வெளியிடப்பட்ட பட்டியல் வருமாறு
Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade
Ellyse Perry wins the Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade
Steve Smith is ICC Men’s Test Cricketer of the Decade
Virat Kohli is ICC Men’s ODI Cricketer of the Decade
Ellyse Perry is ICC Women’s ODI Cricketer of the Decade
Rashid Khan is ICC Men’s T20I Cricketer of the Decade
Ellyse Perry is ICC Women’s T20I Cricketer of the Decade
Kyle Coetzer is ICC Men’s Associate Cricketer of the Decade
Kathryn Bryce is ICC Women’s Associate Cricketer of the Decade
MS Dhoni wins ICC Spirit of Cricket Award of the Decade

No comments:

Post a Comment