ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற கட்டளையால் இடையில் நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற கட்டளையால் இடையில் நிறுத்தம்

நூருள் ஹுதா உமர் & சர்ஜுன் லாபீர்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்தனர். 

அநியாயமாக பலாத்காரமாக எரிக்கப்பட்ட கோவிட் 19 தொற்றுக்கு இலக்கான ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். நஸீரிடம் மகஜர் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது. 

கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள் இருந்தும் கல்முனை நகர மண்டபத்துடன் இந்நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. 

அவ்விடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் போலீஸாருடன் கலந்துரையாடி தனது வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தார். 

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். றிக்காசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.

No comments:

Post a Comment