பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஜெனரலாக தரம் உயர்வு - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஜெனரலாக தரம் உயர்வு

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பு எனும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் (28) ஜனாதிபதியினால் இவ்வாறு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment