லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊவாகலை பகுதியில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.
லிந்துலை ஊவாகலை பகுதியில் வீதியொன்றை புனரமைப்பதற்காக சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனமே, இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் பள்ளத்தை நோக்கி சாயும் வேளையில் சாரதி உட்பட அதில் இருந்தவர்கள் வெளியே பாய்ந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவர் மாத்திரம் வாகனத்துடன் கீழே சென்று உயிரிழந்துள்ளார்.
லிந்துலை - மவுசாஎல்ல கீழ்பிரிவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.இன்ஸமாம் (வயது 32) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லிந்துலை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment