மன்னார் மாவட்டத்தில் புதுவகை நோய்த் தொற்று - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

மன்னார் மாவட்டத்தில் புதுவகை நோய்த் தொற்று

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் பின்னர் கத்திரி மற்றும் பயிற்றை மரக்கறி செடிகளில் புது வகையான தொற்று ஏற்பட்டுள்ளதாக தோட்டப் பயிர் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோய்த் தாக்கத்தினால் கத்திரி மற்றும் பயிற்றை செடிகள் வாடிக் காணப்படுவதுடன், இலைகள் மஞ்சள் நிறமாக பழுத்து விழுகிறது.

இதனால் செடிகளில் காய்கள் மிகவும் குறைவாகவே காய்ப்பதாக தோட்ட செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக பயிற்றை மற்றும் கத்திரிகளை பயிர் செய்து வருகின்றோம். தற்போதைய மழையின் பின்னரே இவ்வாறான நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த வருடத்தில், தோட்டப்பயிர் செய்கையும் பாரிய நஷ்டமா காணப்படுவதாக தோட்டப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்

இந்த நோய்த் தாக்கம் மன்னார், இராசமடு மடுக்கரைப் பகுதியில் உள்ள தோட்டங்களில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment