நடை பயணத்தின் போது செல்லப் பிராணியை அழைத்து செல்பவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

நடை பயணத்தின் போது செல்லப் பிராணியை அழைத்து செல்பவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம்

நடை பயணத்தின் போது செல்லப் பிராணியான நாயை உடன் அழைத்து செல்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிக அளவில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வௌவ்வால்கள் மூலம் பரவத் தொடங்கியது. அதன் பின்னர் சிங்கம், கீரி உட்பட பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா சுலபமாக பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

செல்லப் பிராணிகளில் முதன்மையான நாய் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக செல்லப் பிராணியான நாயை நடை பயணத்தின் போது அழைத்துச் செல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நடை பயணத்தின் போது செல்லப் பிராணியான நாயை அழைத்து செல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் 78 சதவீதம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

செல்லப் பிராணியான நாயை பொது வெளிக்கு அழைத்து செல்லும்போது அழுக்கான இடங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாயின் மேற்பரப்பில் தொற்றிக் கொள்கிறது. 

நாயை அதன் உரிமையாளர்கள் தொடும்போது அதில் பரவியுள்ள வைரஸ் மனிதர்களுக்கும் பரவி விடுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்குபவர்களை காட்டிலும் ஒன்லைனில் ஓடர் செய்து வீட்டில் இருந்தே பொருட்களை பெற்றுக் கொள்பவர்களுக்கு 94 சதவீதம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை காட்டிலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு 76 சதவீதம் கொரோனா பரவுவதற்கான அபாயம் உள்ளது. என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad