கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுபாடுகளை படிப்படியாக நீக்கியதன் பின்னர் ஆபத்தான மோட்டார் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் மோட்டார் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை இதனால் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லையென அவர் தெரிவித்தார்.
எனினும் பயணக் கட்டுபாடுகள் நீக்குவதன் மூலம் நாளாந்தம் அபாயகரமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து காண்பபடுகின்றது.
அந்த வகையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்ட பகுதியான நுகேகொடவில் மோட்டார் விபத்தில் இருவரும் உயிரழந்துள்ளனர். கடந்த காலத்தில் தினமும் 10 ற்கும் மேற்பட்ட மோட்டார் விபத்துக்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் பின் குறிப்பிடத்தக்க விபத்துக்கள் இடம்பெறுகின்றது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment