இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் நிலத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும், 10 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad