மஸ்கெலியா காட்மோர் உசாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக காட்மோர் தோட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணி புரிந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி கார்ட்மோர் பிரதேசத்திற்கு திரும்பிய நிலையில் தற்போது அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை அவர்களது வீட்டில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார துறையினர் மேற்கொண்டு வருவதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment