கடைகளுக்கு செல்வதை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்குமாறு வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, November 30, 2020

கடைகளுக்கு செல்வதை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்குமாறு வலியுறுத்தல்

தற்போதைய நாட்டின் நிலைமைக்கு மத்தியில் வைபவங்கள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாபேம பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பண்டிகைக் காலப்பகுதியில் கடைகளுக்கு செல்வதை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்குமாறு அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நிலையங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் செல்வது பொருத்தமானதாகும். இது தொடர்பில் வீட்டில் உள்ள அனைவரும் தற்போதைய நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

No comments:

Post a Comment