தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது - சாணக்கியன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது - சாணக்கியன் எம்.பி

நூருள் ஹுதா உமர்

உண்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிட்டு வாக்கெடுப்பின் பின்னர் பிரதேச சபை முன்றலில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தமிழ் பேசும் மக்கள் ஒன்று பட வேண்டு. தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment