காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

ஐ.எல்.எம் நாஸிம் 

காரைதீவுப் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

33வது சபை அமர்வின் போது, புதிய ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (10) சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4, தோடம்பழம் சுயேட்சை குழு 01, காரைதீவு சுயேட்சைக்குழு 02 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, சபை நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment