பிரன்டிக்ஸ் கொரோனா கொத்தணி தொடர்பாக விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த விசாரணை அறிக்கையை 2 மாத காலப்பகுதியினுள் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி குறித்து விசாரணையொன்றை முன்னெடுக்க இதற்கு முன்னரும் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment