யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு - திறப்பு விழா நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு - திறப்பு விழா நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதால், நிகழ்வுகளை நேரலையாக www.jfn.ac.lk என்ற பல்கலைக்கழக இணையத்தளத்தினூடாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கின் திறப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைக்கவுள்ளார் என்றும்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை சார்ந்த சகலரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து, முன் அனுமதி பெற்று உள்ளக விளையாட்டு வசதிகளைப பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad