பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 32 வயதான பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. நான் தொடர்ந்து இணையம் வழியாக எனது அரசியல் பணிகளை தொடருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிலாவல் பூட்டோவின் அரசியல் செயலாளர் ஜெமிலுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment