மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது - சில பிரதேசங்கள் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது - சில பிரதேசங்கள் விடுவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கந்தானை மற்றும் மாபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகள் இத்தருணத்திலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்றுப் பரவலை தடுக்கம் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள்
இதேவேளையில், மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள் அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டும் இத்தருணத்தில் இருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள்
குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருநாகல் மாநகர எல்லை பிரதேத்திற்குள் ஏனைய பகுதிகளும்.

குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள்
குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மூன்றைத் தவிர குளியாப்பிட்டிய பொலிஸ் வலையத்தில் ஏனைய பிரதேசங்களும் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment