அரச நிதி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பா நியமனம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

அரச நிதி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பா நியமனம்

அரச நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு இன்று பாராளுமன்றக் கட்டடத்தில் கூடியது. 

இதன்போது, அமைச்சர் பந்துல குணவர்த்தன, குழுவின் தலைமைப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயரைப் பிரேரித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வழிமொழிந்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு சார்ந்து அரச நிதி தெரிவுக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய பூர்வாங்க கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. 

இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் கூடும். அன்று நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பற்றி பேசப்படும்.

தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டத்தில் அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad