புகையிரதங்கள் இன்றும், நாளையும் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது. திங்கட்கிழமை 80 புகையிரதங்கள் புறப்படல் மற்றும் வருகை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய அதிபர் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றிய பரீட்சாத்திகளுக்காகவும், பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காகவும் கடந்த மாதம் 12 ஆம் திகதியில் இருந்து விசேட புகையிரத சேவைகள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்டன.
உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்றும், நாளையும் புகையிரதங்கள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நாளை மறுதினமும் அதாவது திங்கட்கிழமை நீக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய புகையிரத போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திங்கட்கிழமை 80 புகையிரதங்களை புறப்படல் மற்றும் மீள் வருகை போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தூர பிரதேச புகையிரத சேவைகள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
புகையிரத பயண சீட்டு விநியோகம் மற்றும் இதர சேவைகள் தொடர்பில் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment