கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்ற 100 வர்த்தகர்களுக்கு எதிராக நேற்றைய தினம் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்து விற்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை சோதனையை ஆரம்பித்துள்ளதாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்குள்ள பகுதிகளிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
அநேக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்தது அவற்றைத் தேடும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர்கட்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 4ஆம் திகதி பல்வேறு வகை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் விவகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.
No comments:
Post a Comment