இன்று முதல் பேருந்துகளில் பயணிக்க புதிய நடைமுறை - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

இன்று முதல் பேருந்துகளில் பயணிக்க புதிய நடைமுறை

போக்குவரத்து தொடர்பில் 3 நடைமுறைகள் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கொவிட் போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட உள்ளது. 

சாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். 

அப்படியில்லாமல் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad