அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு இன்று முதல் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தனியார் வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தற்போது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இன்று முதல் தனியார் வர்த்தக நிலையங்களிலும் நிர்ணய விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை அரிசியை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment