மேல் மாகாணத்தில் மின் விநியோகம் துண்டிப்பு இல்லை - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

மேல் மாகாணத்தில் மின் விநியோகம் துண்டிப்பு இல்லை

மேல் மாகாண மின் பாவனையாளர்கள் மாத மின் கட்டணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டாலும் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 4 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஒரு சில பிரதேசங்களிலும், அதே மாதம் மேல் மாகாணத்திற்கும் ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. 

மேல் மாகாணத்தில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாத மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளில் மின்சாரம் அதிகளவில் பாவிக்கப்படுவதால் மின் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளது. 

ஆகவே பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad