பாசிக்குடாவில் பஞ்சகர்ம வைத்திய சிகிச்சை ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

பாசிக்குடாவில் பஞ்சகர்ம வைத்திய சிகிச்சை ஆரம்பித்து வைப்பு

எஸ்.ஐ.எம். நிப்ராஸ்
மட்டக்களப்பு - பாசிக்குடா ஆயுர்வேத பஞ்சகர்ம வைத்திய சிகிச்சை நிலையத்தில் வைத்திய சிகிச்சையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் கலந்துகொண்டு ஆயுர்வேத பஞ்சகர்ம வைத்திய சிகிச்சை முறையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) ஆர். ஸ்ரீதர், மாகாண சுதேச மருத்துவத்துறை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. சிவவதனா நவேந்திர ராஜா மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி பி.ஆர்.நிர்மலநாதன் ஆகியோரினால் கிரக பிரவேசம் செய்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில், மாகாண சுதேச மருத்துவத்துறை கணக்காளர் என்.பாலநந்தன், மாகாண சுதேச மருத்துவத்துறை மருத்துவ திட்டமிடல் அதிகாரி வைத்தியர் எஸ்.உதயனன், நிலாவெளி மாவட்ட ஆயுர்வேத சித்த வைத்திசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.நிரஞ்சன், பேத்தாழை மத்திய ஆயுர்வேத மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.குமுதினி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் 15.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த பாசிக்குடா ஆயுர்வேத பஞ்சகர்ம வைத்திய சிகிச்சை நிலையம் கட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment