யாழ் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கு வழங்க அங்கஜன் எம்.பி ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

யாழ் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கு வழங்க அங்கஜன் எம்.பி ஏற்பாடு

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்குகள் 140 ஹெக்டேர் விவசாய தோட்டங்களுக்களில் பயிர்ச்செய்கை செய்யும் வண்ணம் 60 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் வழங்கப்படவுள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு” தொனிப்பொருளிள் விவசாயத்தில் முன்னேற்றகரமான பாதையை நோக்கி யாழ் விவசாயிகள் நகர்ந்து செல்ல வழிவகை செய்யும் நோக்கில் கடந்த 5 வருடங்களை போன்று இந்த வருடமும் யாழ் விவசாயிகளுகாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது பரிந்துரைக்கு அமைவாக நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சினால் ஒரு விவசாயிக்கு கூடியளவு 4 விதை உருளைகிழங்கு பெட்டி வீதம் வழங்க 7000 விதை உருளைக்கிழங்கு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த விதை உருளைக்கிழங்குகள் டிசம்பர் மாதம் முதல் வாரம் அளவில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment