வீதிகளில் உயிரிழந்ததாக போலிச் செய்தியை பரப்பிய மேலும் ஒருவர் கைது! - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

வீதிகளில் உயிரிழந்ததாக போலிச் செய்தியை பரப்பிய மேலும் ஒருவர் கைது!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதியில் கண்டெடுக்கப்பட்டன என போலியான பிரச்சாரம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதியில் கண்டெடுக்கப்பட்டன என்று சமூக ஊடகங்களில் போலியான பிரச்சாரங்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி - ஹந்தன பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேக நபர் குற்ற புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அதன்படி குறித்த குற்றச்சாட்டில் இதுவரை இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், கைது செய்யப்பட்ட கடுகன்னா பகுதியைச் சேர்ந்த 35 வயதான சந்தேகநபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad